சினிமா
ஆளவிடுங்கடா சாமிங்களா.. புடுங்கனது பூராவே தேவையில்லாத ஆணி.. போனி கபூர் ட்வீட்!

தயாரிப்பாளர் போனி கபூர் திடீரென அதற்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என ட்வீட் போட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு படத்தை தயாரித்துள்ள போனி கபூர் இந்த முறையாவது பெரிய வசூல் வருமா என காத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான துணிவு ட்ரெய்லர் அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும், பீஸ்ட் படத்தை போலவே இருக்கு என்றும் மணி ஹெய்ஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களின் காப்பி என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் தமிழ் மற்றும் தெலுங்கில் சக்கைப் போடு போட்டது. அந்த படத்தை இந்தியில் போனி கபூர் தான் ரீமேக் செய்யப் போகிறார் என்றும் வருண் தவான் நடிப்பில் உருவாக உள்ள அந்த படத்தில் போனி கபூரின் அன்பு மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவிலும் திரையுலகிலும் அதிகளவில் வலம் வருகிறது.

இந்த விஷயம் போனி கபூர் காதுகளுக்கும் எட்டிய நிலையில், நான் அந்த படத்தோட ரைட்ஸை வாங்கவே இல்லை. லவ் டுடே இந்தி ரீமேக் பற்றி இணையத்தில் வலம் வரும் அத்தனை விஷயங்களும் வெறும் வதந்தி மட்டும் தான் என பொளேரென ட்வீட் போட்டு ஆன்லைன் ட்ராக்கர்களுக்கு ஆப்படித்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு துணிவு படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து லாபம் பார்க்கும் நோக்கில் மட்டுமே இப்போது போனி கபூர் குறியாக உள்ளார். வலிமை படத்தை போலவே இந்த படமும் 200 கோடி வசூலை அள்ளுமா? அல்லது 300 கோடி வசூலை தாண்டுமா என அஜித் ரசிகர்கள் இப்பவே கணக்கு போட ஆரம்பித்துள்ளனர்.










