Connect with us

இந்தியா

சிறுநீரகத்தை விற்று தந்தையின் கடனை அடைக்க முயன்ற மாணவி.. லட்சக்கணக்கில் ஏமாந்த சோகம்!

Published

on

தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அவரது தந்தை கைச் செலவுக்காக தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்துள்ளார். அந்த டெபிட் கார்டின் மூலம் மாணவி தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து கடிகாரங்கள், ஆடைகள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி உள்ளார்.

இதனை அடுத்து தந்தை தனது வங்கி கணக்கை சரி பார்க்கும் முன்னர் அந்த பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்று தந்தையின் அக்கவுன்டில் பணம் போட திட்டமிட்டார்.

இதுகுறித்து ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த விளம்பரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு ரூ 7 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள நபரை அவர் தொடர்பு கொண்டபோது டாக்டர் பிரவீன் ராஜ் என்பவர் பேசுவதாகவும் சிறுநீரகம் பொருத்த மாக இருந்தால் ஆரம்ப தொகையாக 3.5 கோடி வழங்கப்படும் என்றும் சிறுநீரகம் பெற்றவுடன் மீதி தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது மருத்துவ அறிக்கை உள்பட அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் அவர் சிறுநீரகத்தை தானம் செய்யத் தகுதியுடையவர் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுநீரகம் தானம் செய்வதற்கு முன்னர் ஒரு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 16 லட்ச ரூபாய் அந்த மாணவி கட்ட வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்சம் எடுத்துக் கட்டியுள்ளார். அதன்பிறகு அவர் டெல்லிக்குச் சென்று சிறுநீரகத்தை தானத்தை வழங்கி விட்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் கூறியபடி அந்த நர்சிங் மாணவி டெல்லி சென்ற போதுதான் அது ஒரு போலியான முகவரி என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர் காவல் துறையை அணுகி தான் 16 லட்ச ரூபாய் ஏமாந்ததை தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தற்போது அந்த மோசடி நபரை கண்டுபிடிப்பதற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறப்பட்ட நிலையில் மாணவி தந்தைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் அதன்பின்னர் மாணவி அவருடைய தோழிகளில் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?