இந்தியா
அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு!
Published
2 months agoon
By
Shiva
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இதுவரை ஆண்ட்ராய்டு போன்களுக்கும் மட்டுமே 5ஜி சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ஐபோன் பயனாளிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் அதற்கான மென்பொருளை டவுன்லோட் செய்தால் ஐபோனில் 5ஜி சேவையை இந்தியாவில் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஐபோன் 12 மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து ஜியோ பயனர்களுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தின் படி கூடுதல் கட்டணமின்றி அன்லிமிடெட் 5ஜி டேட்டா உடன் ஜியோ வரவேற்பு சலுகையை பெறலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro, iPhone 13, Pro Max, iPhone SE 2022 (3rd gen), iPhone 14, iPhone 14 Plus ஆகிய ஐபோன் மாடல் வைத்திருக்கும் பயனாளிகள் மற்றும் iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகிய மாடல்களை வைத்திருக்கும் ஐபோன் பயனாளிகள் இன்று முதல் 5ஜி சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
You may like
-
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!
-
5ஜி டேட்டா பிளான் எவ்வளவு? விலையை அறிவித்த ஜியோ
-
இனிமேல் ஐபோன் என்றால் டாடா தான்.. ரூ.4290 கோடி முதலீடு
-
ரூ.11,990 மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட் வெறும் ரூ.1499க்கு விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி
-
ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண நிச்சயதார்த்தம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.15 லட்சம் செலவா?
-
630 ஜிபி டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்: ஜியோவின் ஹேப்பி நியூ இயர் பிளான்!