இந்தியா
சிஆர்பிஎஃப் நிறுவன தினம் – ஜூலை 27
மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் சிஆர்பிஎஃப் (Central Reserve Police Force), இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் போது 1939-ம் ஆண்டு, 27-ம் தேதி ஜூலை மாதம் அரசு பிரதிநிதிகள் காவல் படை (Crown Representative’s Police) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
பின்னர் சுதந்திரம் கிடைத்த பிறகு 1949-ம் ஆண்டு, 28-ம் தேதி, டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force) என மாற்றம் செய்யப்பட்டது.