சினிமா செய்திகள்
பிக்பாஸ் 5: இந்த இரண்டு பிரபலங்கள் உறுதி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க விஜய்டிவி திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து முதல்கட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவதாக நடிகர் நகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷங்கரின் ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல் என்பதும் தற்போதும் அவர் பிசியான நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.
அதேபோல் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து செய்வது குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், ரேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.
























