சினிமா செய்திகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்: விஜய்சேதுபதிக்காக சிம்பு பாடிய பாடல்
Published
2 years agoon
By
Shiva
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வேங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பதும் முருகா என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முருக பக்தராக நடித்திருக்கும் நிலையில் உண்மையான முருக பக்தரான சிம்பு இந்த பாடலை பாடினால் சரியாக இருக்கும் என இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கேட்டுக்கொண்டதற்கிணங்க சிம்பு இந்த பாடலை பாட சம்மதித்துள்ளார். சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த பாடலை கேட்டு முருக பக்தர்கள் பக்தி பரவசம் அடைகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் போது இந்த பாடலை கேட்டு கொண்டு சந்தோஷமாக நடந்து செல்வார்கள் என்று முருக பக்தர்களிடமிருந்து கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்ராஜா, மகிழ்திருமேனி, கரு பழனியப்பன், ரித்திகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி