சினிமா செய்திகள்
காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் இரண்டாம் சீசனில் சர்வாதிகாரி டாஸ்க்கில் கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.

அதற்கு முன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நாயாகியாக நடித்திருந்தார்.
ஆனால், பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலமாகத்தான் பரவலாக அறியப்பட்டார்.
அந்த நிகழ்ச்சியிலேயே ஷாரிக்கை காதலித்தது போல நடித்தார். தற்போது நிஜமாகவே காதலில் விழுந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, கன்னித்தீவு ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா, காதலில் விழுந்துவிட்டதாக சூசகமாக பதிவிட்டுள்ளார். ஆனால் தான் யாரை காதலிக்கிறேன் என்பதை அவர் சொல்லவில்லை. அவருடைய பதிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

















