சினிமா
மருத்துவமனையில் இருந்து திரும்பிய குஷ்பு; முதலில் பதிவிட்ட ட்வீட் என்ன தெரியுமா?

நடிகை குஷ்பு மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு உடல்வலி மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையுல் அனுமதிக்கப்பட்டார். ‘உங்கள் உடல் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள்’ எனவும் கூறி இருந்தார்.
தற்போது, நடிகை குஷ்பு மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘மருத்துவமனையில் இருந்து இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளேன். இன்னும் சில நாட்கள் முழுமையாக படுக்கையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு வாரத்திற்கு வெளியில் பயணம் செய்வதையும் தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள்.
மருத்துவர்கள் அறிவுறுத்தலை பின் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்கு அலுவலகம் மற்றும் பிற பணிகளைத் தவிர்க்க இருக்கிறேன். நான் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பிரார்தித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் காட்டிய அன்பினாலே குணமாகி கொண்டிருக்கிறேன். நெகிழ்ச்சியாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார் குஷ்பு.