சினிமா செய்திகள்
தளபதி 63 ஷூட்டிங்கில் ரசிகர்களுக்கு தடியடி

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் உள்ள காசிமேட்டு குப்பத்தில் நடந்து வருகிறது.
விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சி அங்கு படமாக்கப்படுவதை அறிந்த விஜய் ரசிகர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவில் நூற்றுக் கணக்கில் குவிந்தனர்.
ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கி, நடிகர் விஜய்யும் அவர்களை சந்தித்து கையசைத்தார்.
இந்நிலையில், நேற்று மாலையும் காசிமேடு குப்பத்தில், தளபதி 63 ஷூட்டிங் நடைபெற்றபோது, ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
விஜய் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால், அவர்களை பார்க்க வெளியே வரவில்லை. இதனால், ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை கவனித்த துறைமுக காவல்துறையினர், அங்கு விரைந்து வந்து ரசிகர்கள் கலைந்து போகச் சொன்னார்கள். ஆனால், ரசிகர்கள் அதனை கேட்காமல், பிரச்னை செய்யவே, அவர்கள் மீது லேசான தடியடி நடத்திய காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர்.
























