உலகம்
தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்கும் உதவி செய்திடத்தான் போட்டியுடிகிறார் என்று பராக் ஒபாமா விமர்சனம் செய்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா பரப்புரையில் ஈடுபட்டு வருகிறர்.
ஃப்லோரிடா மாகானத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பராக் ஒபாமா, டிரம்புக்கு சராசரி அமெரிக்கர்கள் மீது எந்த அக்கரையும் கிடையாது. கோவிட்-19 தொற்று காலத்தில் அவரிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று டிரம்ப் மீது ஒபாமா குற்றம்சாட்டினர்.
அதே நேரம் ஜோ பைடனும், கமலா ஹாரிஸூம் அவர்களுக்காகத் தேர்தலில் போட்டியிடவில்லை, மக்களுக்காகத்தான் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்கர்களுக்காகக் கவலைப்படுவர். தங்களுக்கு வாக்கு செலுத்தாதவர்கள் மீது அக்கரை காட்டுவார்கள் என்றும் ஓபாமா தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளார்.

















