Connect with us

Uncategorized

Are You Dead?” (நீ உயிரோட இருக்கிறாயா?) என்ற ஒரு புதிய பாதுகாப்பு ஆப்,

Published

on

Are You Dead?” (நீ உயிரோட இருக்கிறாயா?) என்ற ஒரு புதிய பாதுகாப்பு ஆப், இந்த வாரம் சீனாவின் Apple App Store-ல் பணம் கொடுத்து வாங்கும் ஆப்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஆப்பில், பயனர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய பட்டனை அழுத்த வேண்டும். அதனால் “நான் இன்னும் உயிரோட இருக்கிறேன்” என்று உறுதி செய்யப்படுகிறது.

யாராவது தொடர்ந்து இரண்டு முறை அந்த பட்டனை அழுத்தவில்லை என்றால், அந்த நபர் கொடுத்திருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு (நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்) ஆப் தானாகவே தகவல் அனுப்பும். அவர்கள் வந்து அந்த நபரை சரிபார்க்கலாம்.

இந்த ஆப், தனியாக வசிக்கும் இளைஞர்கள், நகரத்தில் வேலை செய்பவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

“நீ உயிரோட இருக்கிறாயா?” என்ற இந்த வித்தியாசமான பெயர், தனிமை, சுயமாக வாழ்தல், பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மக்களிடம் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

பெரிய நகரங்களில் தனியாக வாழும் கோடிக்கணக்கான சீன மக்களுக்கு, இந்த எளிய ஆனால் கொஞ்சம் பயமூட்டும் யோசனை மிகவும் பிடித்திருக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
How much does a stone coated steel roof cost commercial & residential roof contractor clark roofing.