தமிழ்நாடு
நான் ஷாப்பிங் போன தாங்க மாட்டீங்க.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை; அதிமுகவில் பாஜகவின் நிர்வாகிகள் இணைந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து உள்ளார்.

Annamalai
இதையடுத்து அதிமுக பாஜக இடையில் திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பிற்கும் சரமாரி கருத்து யுத்தம் ஏற்பட்டு உள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணி கட்சியாக இருந்தியு கொண்டு இப்படி செய்து இருக்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜகதான் ஆட்சி அமைக்க போகிறது. அண்ணாமலை தலைமையிலான பாஜகதான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும், என்று அமர் பிரசாத் ரெட்டி கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுகவின் செயலுக்கு எதிர்வினை இருக்கும். நானும் ஷாப்பிங் போவேன். நிர்வாகிகளை பிடிக்க நினைத்தால் நானும் பை பையாக பிடிப்பேன். அதற்கான நேரம் காலம் வரும்.
எங்களை நம்பித்தான் அதிமுக இருக்கிறது. திராவிட கட்சிகள் பாஜகவை நம்பி இருக்கின்றன. அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. முன்பெல்லாம் பாஜகதான் திராவிட கட்சிகளை நம்பி இருப்பதாக சொல்லுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.