சினிமா செய்திகள்
2019-ல் தேர்தல் இருந்தும் மோடியையே மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம்!

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது.
அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். குடும்பங்களுடன் பார்க்கும் கூடிய படமாக வெளியான விஸ்வாசம் தான் 2019-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை செய்துள்ள படமாகவும் உள்ளது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி போன்றவை இருந்த போதிலும், டிவிட்டரில் தமிழகத்தில் அதிகளவில் பகிரப்பட்ட ஒரு தலைப்பாக விஸ்வாசம் வந்துள்ளது அஜித் ரசிகர்களுக்குப் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் இடத்தில் மக்களவை தேர்தல் 2019 இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும், 4வது இடத்தில் மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படமான மஹரிஷியும், 5வது இடத்தில் ஹாப்பி தீபாவளி ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் முழுமையான பட்டியல் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.













