சினிமா
பொங்கலுக்கு தல ஹாப்பியா வறாரு.. விஸ்வாசம் செகண்ட் லுக் ரிலீஸ்!

விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டது.
இதில், பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. சிகப்பு சட்டை, வேட்டியில், அஜித் புல்லட்டில், திருவிழா பேக் ரவுண்டில், முக்கியமாக தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் விட்டு ஓட்டிக் கொண்டு ஹாப்பியாக வருகிறார்.
வரும் பொங்கல் தல ரசிகர்களுக்கு தல பொங்கலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் செகண்ட் லுக் போஸ்டர் ரிலீசை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.











