இந்தியா
ஆமதாபாத்தில் பயணிகள் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் வீழ்ச்சி – மனிதப் பிழை காரணமா?

ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம், லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிச் சென்றபோது, புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் மேகானி நகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது.
இந்த பயணிகள் விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 230 பேர் பயணிகள், 10 பேர் விமான ஊழியர்கள் மற்றும் 2 விமானிகள் அடங்குகின்றனர்.
விமானம் மேகானி நகரில் உள்ள ஒரு மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு மிகுந்த சோகமான விபத்தாக கருதப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் ஆரம்பகட்ட விசாரணைகளில் இது மனிதப் பிழையால் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
