சினிமா
சிவகார்த்திகேயன் படத்தை அடுத்து பிரபல கதாநாயகன் தம்பியுடன் ஜோடி சேரும் அதிதி?

சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தை அடுத்து பிரபல கதாநாயகன் தம்பியுடன் அதிதி ஜோடி சேர இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்து வரக்கூடிய ‘மாவீரன்’ படத்தில் அதிதி ஷங்கர் பத்திரிக்கையாளராக நடித்து வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கும் நிலையில் இவரது அடுத்தப் படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ் முரளியுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் அதிதி. இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2015-ல் ‘யட்சன்’ திரைப்படம் வெளியானது.
இதனை அடுத்து இவரது கம்பேக் படமாக நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என முன்பே தகவல் வெளியானது. இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஈ.சி.ஆர். பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில்தான் இந்தப் படத்தில்தான் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருக்கிறார்.
இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலேயே நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முழுக்க கமர்ஷியல் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.