சினிமா
மதன் பாப் மகளாம்மா நீ.. நீயா நானா கோபியே ஷாக் ஆன தருணம்!

சிரிக்க ஆரம்பித்தாலும் ஸ்டாப்பிங்கே இல்லாமல் சிரித்து நம்மையும் சிரிக்க வைக்கும் திறன் கொண்ட நடிகர் மதன் பாப்பின் மகள் ஜனனி சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாத பாடகர்கள் வரிசையில் பல பாடகர்கள் அமர்ந்திருந்த இடத்தில் மதன் பாப்பின் மகளும் அமர்ந்திருந்தார்.

#image_title
தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ”ரோஸு ரோஸு” பாடலையும், வீராப்பு படத்தில் “போனா வருவீரோ” உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியவர் தான் என கோபிநாத்திடம் கூறிய அவர், மதன் பாப்பின் மகளும் நான் தான் எனக்கூற, மதன் பாப்பின் மகளாம்மா நீ என நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத்தே ஒரு செகண்ட் ஷாக் ஆகி அவரிடம் பேச ஆரம்பித்தார்.

#image_title
நடிகர் மதன் பாப்பை அனைவரும் நகைச்சுவை நடிகர் என்று தான் அறிந்திருப்போம். ஆனால், அவர் தான் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசை ஆசிரியராக இருந்தார் என்கிற உண்மை பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியிருந்த மதன் பாப்பின் வாரிசுக்கும் இசை தானாக அமையத்தானே செய்யும். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜனனி பல நூறு பாடல்களை பாடியுள்ளாராம்.