தமிழ்நாடு
ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட ராதிகாவுக்கு கொரோனா!

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையை சமீபத்தில் சிறப்பு நீதிமன்றம் விதித்தது என்பதும் இதனை அடுத்து கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ராதிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காசோலை மோசடி வழக்கில் தங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சற்றுமுன் நடந்த நிலையில் சரத்குமார் மட்டுமே ஆஜரானார். இதனை அடுத்து ராதிகா ஆஜராகாததற்கு விளக்கமளித்த அவரது தரப்பினர் அவருக்கு கொரோனா பாதிப்பு என்று குறிப்பிட்டு அதற்கான சான்றிதழை அளித்தனர்.
இதனை அடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர்களின் ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்கள். தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர் மீண்டும் வருவார் என்றும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.


















