தமிழ்நாடு
சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய்சேதுபதி

சாதி மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது வாக்கை பதிவு செய்தபின் கூறினார்.
நடிகை விஜய் சேதுபதி இன்று கோடம்பாக்கத்தில் தனது வாக்கை பதிவு செய்ய வருகை தந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்த போது அவரை காண அவரது ரசிகர்கள் முண்டியடித்ததால் ஒரு சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் ரசிகர்களின் அன்பு தொல்லை அதையும் மீறி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ’எனக்கு மனிதர்கள் தான் முக்கியம் என்றும் சாதி மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். நான் எப்போதும் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவன் என்றும் எப்போதும் எனது நிலைப்பாடு அதுவே என்றும் அவர் மேலும் கூறினார்.




















