தமிழ்நாடு
நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்!

தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் பின்னர் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் மாதவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும், தான் உடல் நலம் தேறி வருவதாகவும், நான் நலம்பெற பிரார்த்தனை செய்த ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மாதவன் நடித்த மாறா திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் ராக்கெட்டரி என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று மாதவனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021