சினிமா செய்திகள்
நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

உலக நாயகன் கமல் ஹாசன் நவம்பர் 23-ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கமல் ஹாசனுக்கு வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்குக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவர்கள் இவரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்கள்.
நடிகர் கமல் ஹாசன் இப்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பிலும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
உடல்நலம் சரியில்லாததால், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு யாராவது தொகுத்து வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் கமல் ஹாசன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மேலும் தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் பல்வேறு படங்களையும் கமல் ஹாசன் தயாரித்து வருகிறார்.
அண்மையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் எந்த ஒரு கமல் திரைப்படமும் செய்யாத வசூலை விக்ரம் செய்துள்ளது என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.