சினிமா செய்திகள்
வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் வாரிசு.
கார்த்தி நடிப்பில் தோழா படத்தை இயக்கிய வம்சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரபு, ஷாம், சரத் குமார் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
தமன் இசையில் வாரிசு படத்தில் பாடி நடனமாடிய ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி யூடியுபில் 60 மில்லியனுக்கும் அதிகமாகப் பார்வையாளர்கள் பெற்றுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும். பாடல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது.
மேலும் வாரிசு டீசர் டிச்மபர் 25-ம் தேதியும், ட்ரெய்லர் டிசம்பர் 31-ம் தேதியும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துக்குப் போட்டியாக அஜித் நடிப்பில் துணிவு படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
துணிவு படத்தில் சிங்கிள் பாடல் சில்லா சில்லா விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு, துணிவு படக்குழுவினர்கள் பொங்கலுக்குப் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
வாரிசு படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் சங்கராந்தி அன்று ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் பொங்கலின் போது முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்வினை எழுந்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் பொங்கலுக்குத் தமிழில் வாரிசு படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆவது உறுதி என கூறப்படுகிறது.