சினிமா செய்திகள்
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?

நடிகர் சிம்பு நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து வந்த பத்து தல படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை கேக் வெட்டப்பட்டு முடிவடைந்தது.
பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சிம்பு அடுத்து நடிக்க உள்ள படம் எது என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தை தொடர்ந்து எந்த படமும் இயக்காமல் இருந்து வந்த நிலையில், சிம்புவை வைத்து அடுத்து படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் – சிம்பு இணையம் படம் குறித்து இது வரையில் எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில், வெந்தது தணிந்தது காடு 2-ம் பாகம் கண்டிப்பாக உண்டு என சமீபத்தில் நடைபெற்ற அந்த படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.
மறுபக்கம் கேஜிஎஃப், காந்தாரா படங்களைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது.
ஆனால் சிம்பு மாநாடு வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை 35 கோடியாக உயர்த்தி கேட்பதே, அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்க முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.
பத்து தல திரைப்படம் முதலில் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படம் ஜனவரி 26 அல்லது பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.