சினிமா செய்திகள்
முழு பைத்தியமாகிவிட்ட அபிஷேக்: சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு அரைப் பைத்தியம் அல்லது முழு பைத்தியத்தை போட்டியாளராக விஜய் டிவி நியமனம் செய்யும் என்பதும் அந்த போட்டியாளரால் மற்ற போட்டியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த சீசனில் அபிஷேக் அந்த பட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. முதல் நாளிலிருந்தே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் அட்டகாசங்கள் அட்ராசிட்டிகள் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தாங்கமுடியாத எரிச்சலாக உள்ளது.
அபிஷேக் எப்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்றே பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிலும் அவர் தன்னுடைய வேலையை காண்பித்துள்ளார்.
எல்லோரிடமும் நான் சொல்வதை மட்டுமே கேளுங்கள், பிக்பாஸ் என்பது ஒரு மைண்ட்கேம், இதில் செண்டிமெண்டுக்கு இடமில்லை. எனக்கு ரைட்டு, தப்பு என்று எதுவுமே இல்லை என்று சம்பந்தமே இல்லாமல் வாதாடுகிறார்.
அதுமட்டுமின்றி அவர் சிபியுடன் வாதாடும் போக்கைப் பார்க்கும்போது இந்த இந்த நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்களை உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மொத்தத்தில் முழு பைத்தியமாக மாறி விட்ட அபிஷேக்கை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அனைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day16 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/BXrYqsfGfT
— Vijay Television (@vijaytelevision) October 19, 2021














