Connect with us

சினிமா

ரஜினிகாந்த்துடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா!

Published

on

நடிகர் ரஜினிகாந்த் உடன் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளதை நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமாக அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ‘மழை’, ‘திருவிளையாடல்’, ‘சிவாஜி’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இதில் ‘சிவாஜி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரேயா. இப்பொழுது இவருடைய ‘கப்ஜா’ திரைப்படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் நடிகை ஸ்ரேயா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, ‘ ‘கப்ஜா’ திரைப்படம் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. அதுபோல, ‘சிவாஜி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். இந்தப் படத்தில் நடித்த போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் என்றென்றுமே சூப்பர் ஸ்டார் தான்! அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். நமக்கு வரும் வெற்றியை எப்பொழுதும் தலைக்கு மேல் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your business page ranks locally on google with dr68 authority, turning searches into customers..