சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் ஆவது எப்போது?

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தைச் சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்கிறார்.
இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

Sivakarthikeyann In Maaveeran Releases On June 29
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இப்போது அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. மார்ச் தொடக்கத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்கிறார்கள்.
படப்பிடிப்பு நடத்துவதில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இப்போதே வெளியீட்டுத் தேதியையும் முடிவு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தடையின்றி வேகமாக நடக்கும் தயாரிப்பு தரப்பில் கூறுகிறார்கள்.
கோடைவிடுமுறையில் பொன்னியின் செல்வன், ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டு உள்ளனர். அதனால் ஜீன் 29-ம் தேதி மாவீரன் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்

















