Connect with us

சினிமா செய்திகள்

லவ்டுடே இந்தி ரிமேக்கில் நடிப்பது இந்த பாலிவுட் நடிகரின் மகனா..? ரீமேக் உரிமை எவ்வளவு தெரியுமா?

Published

on

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் லவ்டுடே.

2022-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிகபட்ச லாபத்தைத் தயாரிப்பாளருக்குப் பெற்றுத் தந்த படம் லவ்டுடே. ஆறு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் எழுபது கோடி வசூலித்து சாதனை படைத்தது.

Amir Khan Son Junaid To Act In Love Today Hindi Remake

லவ் டுடே படத்தை இந்தியில் தயாரிக்க அதன் உரிமையைக் கேட்டிருக்கிறார்கள். இந்தியில் இந்தக்கதையில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிந்த ஏஜிஎஸ் நிறுவனம், இந்தியிலும் நாங்களே தயாரிக்கிறோம் என்று தங்கள் விருப்பத்தைக் கூறியிருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொள்ளாமல் உரிமைக்கான தொகையைச் சொல்லுங்கள் என்று கேட்க, பத்துகோடி என்று விலை கூறப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எட்டு கோடி என்று முடிவாகியிருக்கிறது.

எட்டு கோடியில் சரிபாதி நான்கு கோடியை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்குக் கொடுத்து இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். அந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கியதற்காக அவர் வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு ரீமேக் உரிமை விற்பனை மூலம் வந்த தொகையில் பங்கு தொகையாக ஏஜிஎஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இது போன்று நேர்மையாக நடந்துகொள்வதில்லை.
அந்நிறுவனத்தின் இந்த நற்செயலுக்கு உடனே ஒரு நற்பலன் கிடைத்திருக்கிறது.

இந்தி உரிமைக்கு எட்டு கோடி கொடுத்துவிட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் விருப்பத்தை உணர்ந்து இந்தியில் படம் தயாரான பின் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரையும் படத்தில் குறிப்பிடுங்கள் என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் நடிகர் அமீர்கான்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?