Connect with us

இந்தியா

திடீரென வேலை போய்விட்டதா? மனதளவில் தயாராவது எப்படி?

Published

on

ஊடகங்களில் தினமும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்று ஒரே நாளில் அதிர்ச்சி ஆவதை விட அதற்கு முன்கூட்டியே தயாராவது நல்லது.

நாம் வேலை பார்க்கும் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பது உறுதி செய்யப்பட்டால் வேலை நீக்க பட்டியலில் நமது பெயர் இருக்கும் என்று எதிர்பார்த்தால் உடனடியாக நாம் சுதாரித்துக் கொண்டு அடுத்த வேலையை தேட ஆரம்பித்துக் கொள்ள வேண்டும்.

வேலை நீக்கும் நடந்த பிறகு வேலை தேடுவது என்பது கஷ்டம் என்பதால் முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் அவர்களுடைய அலுவலகத்தில் வேலை காலி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது ரெஸ்யூமை உடனடியாக அப்டேட் செய்து கொண்டு முக்கிய நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில் வேலை போக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதியை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை வேலை கிடைக்க தாமதமானாலும் அதுவரை பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே சேமிப்பு திட்டங்களை செய்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை நிறுத்தி, தேவையான செலவுகளை குறைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வேலையில்லாத காலத்தை மன அழுத்தம் இன்றி கழிப்பதற்கு திட்டமிட வேண்டும்.

அது மட்டும் இன்றி வேலையில் இருந்து நீக்கப்பட்ட உடன் நிறுவனத்திடம் செய்து கொள்ள வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சர்வீஸ் லெட்டர், எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் போன்றவற்றை தவறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அது அடுத்த வேலைக்கு தேடுவதற்கு உதவியாக இருக்கும். அதேபோல் செட்டில்மெண்ட், பிஎப் ஆகிய விஷயங்களை வேலையில் இருந்து நின்ற பிறகு உடனடியாக திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

மேலும் வேலையில் இருந்து நீக்கப்பட்டால் நோட்டீஸ் பீரியட் எவ்வளவு? நிறுவனம் நமக்கு தர வேண்டியது என்னென்ன? நாம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியது என்னென்ன என்பதை பட்டியலிட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், நிறுவனத்துடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலைநீக்கம் செய்யப்பட்டவுடன் புதிய வேலை கிடைக்கவில்லை என்றாலும் மன உளைச்சலை ஏற்படுத்தாமல் அந்த காலகட்டத்தை வீணாக்காமல் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அந்த நிறுவனத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

புதிய வேலை கிடைப்பது ஒரு வேலை கஷ்டமாக இருக்கலாம், இந்த கால கட்டத்தில் வேலைகளில் நாம் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை சரி செய்வதற்கு ஒரு காலகட்டமாக எடுத்துக் கொள்ளலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

கிரிக்கெட்7 நாட்கள் ago

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வேட்டை… ஜூலன் கோஸ்வாமியின் சாதனையை நெருங்கிய தீப்தி சர்மா!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்; பட்டதாரிகள் ஜூன் 22க்குள் விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".