இந்தியா
திடீரென வேலை போய்விட்டதா? மனதளவில் தயாராவது எப்படி?
Published
1 week agoon
By
Shiva
ஊடகங்களில் தினமும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்று ஒரே நாளில் அதிர்ச்சி ஆவதை விட அதற்கு முன்கூட்டியே தயாராவது நல்லது.
நாம் வேலை பார்க்கும் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பது உறுதி செய்யப்பட்டால் வேலை நீக்க பட்டியலில் நமது பெயர் இருக்கும் என்று எதிர்பார்த்தால் உடனடியாக நாம் சுதாரித்துக் கொண்டு அடுத்த வேலையை தேட ஆரம்பித்துக் கொள்ள வேண்டும்.
வேலை நீக்கும் நடந்த பிறகு வேலை தேடுவது என்பது கஷ்டம் என்பதால் முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் அவர்களுடைய அலுவலகத்தில் வேலை காலி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது ரெஸ்யூமை உடனடியாக அப்டேட் செய்து கொண்டு முக்கிய நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில் வேலை போக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதியை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை வேலை கிடைக்க தாமதமானாலும் அதுவரை பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே சேமிப்பு திட்டங்களை செய்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை நிறுத்தி, தேவையான செலவுகளை குறைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வேலையில்லாத காலத்தை மன அழுத்தம் இன்றி கழிப்பதற்கு திட்டமிட வேண்டும்.
அது மட்டும் இன்றி வேலையில் இருந்து நீக்கப்பட்ட உடன் நிறுவனத்திடம் செய்து கொள்ள வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சர்வீஸ் லெட்டர், எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் போன்றவற்றை தவறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அது அடுத்த வேலைக்கு தேடுவதற்கு உதவியாக இருக்கும். அதேபோல் செட்டில்மெண்ட், பிஎப் ஆகிய விஷயங்களை வேலையில் இருந்து நின்ற பிறகு உடனடியாக திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
மேலும் வேலையில் இருந்து நீக்கப்பட்டால் நோட்டீஸ் பீரியட் எவ்வளவு? நிறுவனம் நமக்கு தர வேண்டியது என்னென்ன? நாம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியது என்னென்ன என்பதை பட்டியலிட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், நிறுவனத்துடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.
வேலைநீக்கம் செய்யப்பட்டவுடன் புதிய வேலை கிடைக்கவில்லை என்றாலும் மன உளைச்சலை ஏற்படுத்தாமல் அந்த காலகட்டத்தை வீணாக்காமல் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அந்த நிறுவனத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
புதிய வேலை கிடைப்பது ஒரு வேலை கஷ்டமாக இருக்கலாம், இந்த கால கட்டத்தில் வேலைகளில் நாம் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை சரி செய்வதற்கு ஒரு காலகட்டமாக எடுத்துக் கொள்ளலாம்.
You may like
-
2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!
-
குழந்தை பிறந்த 3 நாளில் வேலையிழந்த கூகுள் ஊழியர்.. அதிகாலை 2 மணிக்கு வந்த மெயில்..!
-
தொடர்கதையாகும் வேலைநீக்க நடவடிக்கை.. 2000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்!
-
ஆசைக்கு இணங்காததால் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.. கூகுள் பெண் அதிகாரி மீது ஆண் அதிகாரி குற்றச்சாட்டு!
-
ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?
-
மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த முயற்சி சக்ஸஸ் ஆனால் வேலைநீக்கம் உறுதி.. திடீரென முளைத்த சிக்கல்!