Connect with us

சினிமா செய்திகள்

’கவலைப்படாதீங்க அண்ணே, நானிருக்கேன்’: நெல்சனுக்கு ஆறுதல் கூறிய சிவகார்த்திகேயன்!

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் நெல்சனுக்கு சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன .

தளபதி விஜய் நடிப்பில் சன்பிக்சர்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படம் வெளியான முதல் காட்சிக்குப் பின்னர் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதனை அடுத்து இந்த படத்திற்கு கூட்டம் குறைவானது என்பதும் நாளை ஒரு தியேட்டர் கூட முழுமையாக முன்பதிவாகவில்லை என்றும், நாளை ஒருசில திரையரங்குகளில் காட்சிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ தோல்வியால் அடுத்து ரஜினி பட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .

எத்தனை தோல்விப்படம் கொடுத்தாலும் நீங்கள்தான் எங்கள் குரு என்றும் உங்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை என்றும் உடனே டாக்டர் 2 படத்தின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுங்கள் என்றும், நாம் இணைந்து ஒரு படத்தை பண்ணுவோம் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நெல்சன் மீண்டும் தன்னை ஒரு வெற்றிப் பட இயக்குனர் என்பதை டாக்டர் 2 படத்தில் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Explore buying a franchise in australia business franchise australia.