சினிமா செய்திகள்
’டான்’ ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்: புதிய தேதி என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’டான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் ’டான்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என கூறப்பட்டது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’டான்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அந்த வகையில் ’டான்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார்.
???????? JALUKKU ???????????? JALUKKU ???????????? JALUKKU ????????
Our #DON is all set to arrive on May 13, 2022 ????????
A complete entertainer awaits you this summer ????#DONfromMay13@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @SonyMusicSouth pic.twitter.com/m7g6weA9YG
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 2, 2022


















