தமிழ்நாடு
நேற்றைய முதல்வர்-கவர்னர் சந்திப்பு: மாறுபட்ட செய்திக்குறிப்பால் பரபரப்பு!

நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் கே.என் ரவி அவர்களை சந்தித்த நிலையில் முதல்வர் தரப்பில் இருந்தும், ஆளுனர் ஆளும் தரப்பில் இருந்தும் வெவ்வேறு விதமாக செய்திக்குறிப்பு இந்த சந்திப்பு குறித்து வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஆளுநரின் ரவி அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன், மா சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களு, உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு தரப்பில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில் நேற்று ஆளுநரை சந்தித்து நீட் மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியதாக வெளியானது.
ஆனால் இன்று கவர்னர் மாளிகை தரப்பிலிருந்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் முதல்வருடன் நேற்று நடந்த சந்திப்பில் மழை வெள்ளம் மற்றும் கொரோனா பாதிப்புகள் குறித்து முதல்வருடன் ஆளுநர் விவாதித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தரப்பில் இருந்தும் ஆளுநர் தரப்பில் இருந்தும் இந்த சந்திப்பு குறித்து வெவ்வேறு விதமான செய்திக்குறிப்பு வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















