Connect with us

சினிமா செய்திகள்

விஜய்யை சந்திக்க விரும்பிய முதலமைச்சர்: சாதுர்யமாக தவிர்த்ததாக தகவல்!

Published

on

நடிகர் விஜய்யை முதலமைச்சரை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் முதலமைச்சர் சந்திப்பை விஜய் சாதுரியமாக தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வலம் வந்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார் என்பதும் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் விஜய்யை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் இதற்காக அவர் தூது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் டெல்லி முதல்வரை சந்திக்க விரும்பவில்லை என்பதை சாதுரியமாக கூறி அந்த சந்திப்பை விஜய் தவிர்த்த விட்டதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்களையே இன்னும் விஜய் மரியாதை நிமித்தமாக கூட சந்திக்காத நிலையில் டெல்லி முதல்வரை சந்தித்தால் அரசியல் பரபரப்பு ஏற்படும் என்பதற்காக விஜய் இந்த சந்திப்பை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆம் ஆத்மி கட்சியை தமிழகத்தில் வளர்ப்பதற்காக விஜய்யின் உதவியை நாட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் விரும்பியதாகவும் எதிர்காலத்தில் விஜய் அரசியலில் இணைந்த ஆம் ஆத்மி உடன் இணைந்து செயல்பட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து விஜய்யை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அரசியலில் தனித்து போட்டியிட விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் எந்த கட்சியுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம் என அவர் விரும்பியதாகவும், அதனால்தான் டெல்லி முதல்வரின் இந்த சந்திப்பை அவர் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..