சினிமா
ஒரு வாய்ப்பும் இல்ல…இதவிட்டா வேற வழி இல்ல!…நமீதா எடுத்த அதிர்ச்சி முடிவு…

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நமீதா. அதன்பின் சரத்குமாருடன் அவர் நடித்த ‘ஏய்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அர்ஜூனா அர்ஜுனா’ பாடலில் அவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது. அதன்பின் இங்கிலீஸ்காரன், அழகிய தமிழ் மகன், பில்லா ஆகிய படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார்.

ஏறக்குறைய ஒரு கவர்ச்சி அணுகுண்டாகவே அவர சினிமாவில் வலம் வந்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடி அசிங்கமானார். எனவே, இயக்குனர்கள் அவரை வைத்து படம் எடுக்க தயங்கினர். எனவே, சின்னத்திரை நடனநிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு அவர் திருமணமும் செய்து கொண்டார்.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு சீரியலில் நமீதா நடிக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
















