சினிமா செய்திகள்
2.0 படத்தில் இத்தனை அவதாரங்களில் ரஜினி வருகிறாரா?

ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான 2.0 படத்தில் ரஜினியின் அவதாரங்கள் அடங்கிய மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
நேற்று அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு தற்போது ரஜினியின் அவதாரங்கள் அடங்கிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ரஜினி இப்படத்தில் விஞ்ஞானி வசீகரன், நல்ல ரோபோ சிட்டி, வில்லாதி வில்லன் 2.0, ஜெயண்ட் 2.0 மற்றும் பாடல்காட்சிகளில் வசீகரிக்கும் ஸ்டைல் ரோபோ என பல கெட்டப்களில் இருக்கும் காட்சிகளை மேக்கிங் வீடியோவில் வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் இந்தியாவின் பெருமை என அழைக்கப்படும் 2.0 வரும் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வருகிறது.

















