சினிமா
கேதார்நாத் டிரைலர் ரிலீஸ்!
எம்.எஸ். தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் உருவாகியுள்ள கேதார்நாத் படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.
அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலிகான் நடித்திருக்கும் கேதார்நாத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று வெளியானது. டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகி மற்றும் நடிகர் சைஃப் அலிகானின் மகளுமான சாரா அலி கான் பூக்கள் டிசைன் கொண்ட பிரத்யேக ஆடையை அணிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
கேதார்நாத்தில் கடந்த வருடம் நடந்த வெள்ளப் பெருக்கு சம்பவத்தை இந்து – முஸ்லிம் காதல் கதையுடன் இணைத்து அபிஷேக் கபூர் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
முஸ்லிம் பெண்ணான சாரா அலிகானை இந்து பெண்ணாக படத்தில் மாற்றியுள்ளனர். இந்து நடிகரான சுஷாந்தை இஸ்லாமிய இளைஞராக படத்தில் நடிக்க வைத்துள்ளனர். பாம்பே படத்தில் இருந்து இந்த ட்விஸ்ட் மற்றும் மாறவே இல்லை. மதப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க இந்த திட்டம் பலனளிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இரு மதப் பிரிவினருக்கிடையே ஏற்படும் மோதலால் இவர்கள் காதல் பிரிவதும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் வெள்ளத்தால் இவர்களது காதல் சேர்ந்ததுமே இப்படத்தின் திரைக்கதை என்பதை டிரைலரை பார்த்தாலே புரியும் அளவிற்கு இயக்குநர் காட்சிப் படுத்தியுள்ளார். அறிமுக படம் என்றாலும், சாரா அலி கான் அசால்ட்டாக நடித்துள்ளார். அதுவும் அந்த லிப் கிஸ் சீன் சான்ஸே இல்லை. விரைவில் படம் ரிலீசாகவுள்ளது.


















