உலகம்
கொரோனா பீதி: இந்தியாவிலிருந்து ஆஸி.,க்குச் சென்றால் 5 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்திருந்து மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே வரும் நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு எடுத்து வரப்படும் இந்த நடவடிக்கை வரும் திங்கட் கிழமை முதல் அமலுக்கு வரும்.
ஆஸ்திரேலியா, இப்போது தான் முதல் முறையாக இப்படியொரு கறார் விதிமுறையை இந்தியாவுக்கு எதிராக விதித்துள்ளது. இன்று மட்டும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை உலக அளவில், ஒரே நாட்டில் இத்தனை பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இப்படி நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தடை உத்தரவுகளையும் விதிமுறைகளையும் அமல் செய்து வருகிறது.







