சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இசையமைக்க கால்ஷீட் வாங்குவதே பெரிய விஷயம் என்ற நிலையில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் திரைப்படம் ’ஆரட்டு’. மோகன்லால் ஜோடியாக இந்த படத்தில் சாரதா ஸ்ரீநாத் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்கி வருகிறார்
இந்த படத்திற்கு ராகுல் ராஜ் என்பவர் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ஷங்கர் இயக்கிய என்ற ’காதலன்’ படத்தில் இடம்பெற்ற ’முக்காலா முக்காபுலா’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் மோகன்லாலின் ’ஆரட்டு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலின் ஒரு காட்சியில் தான் ஏஆர் ரஹ்மான் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஸ்டில்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
A rare and remarkable shoot with the Music Maestro @arrahman for #Aaraattu. @unnikrishnanb pic.twitter.com/GPEz23e0lH
— Mohanlal (@Mohanlal) March 21, 2021


















