சினிமா செய்திகள்
44 வயதில் நீச்சல்குள புகைப்படமா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

44 வயதில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அறிமுகமாகும்போது எப்படி இருந்தாரோ அதே இளமையுடன் இருப்பதாக பல ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளிப்பதுண்டு.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ள ரம்யாகிருஷ்ணன் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார்.
இந்த நிலையில் சற்றுமுன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். இருப்பினும் கிளாமர் இல்லாத இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருவதோடு 44 வயதிலும் அழகு உங்களுக்கு அப்படியே உள்ளது என்றும் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது நான்கு திரைப்படங்களை கையில் வைத்து பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















