சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்ணத்த திரைப்படம் வருகிற நவம்பர் 2021-க்கு நிச்சயம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி திரை அரங்கங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்காக இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#Annaatthe will be releasing on November 4th, 2021!
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE— Sun Pictures (@sunpictures) January 25, 2021

















