டிவி
Bigg Boss 102வது நாளில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘ஜாக்பாட் சர்ப்ரைஸ்’!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவுக்கு வரப் போகிறது. பிக் பாஸின் சீசன் 4ல் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் காரணத்தினால், யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே நேரத்தில் ஆரி அல்லது பாலாஜிக்கு டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆனால், போட்டி எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாறலாம் என்பதனால், இன்னும் எஞ்சியிருக்கும் மற்ற நால்வருக்கும் கூட டைட்டிலை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் கேபி, சோம், ரம்யா மற்றும் ரியோ ஆகிய நான்கு பேருக்கும் டைட்டிலை தட்டிச் செல்ல வாய்ப்புகள் அதிகமே.
இப்படியான சூழலில் பிக் பாஸின் 102வது நாளான இன்று, போட்டியாளர்களுக்கு ஒரு ‘ஜாக்பாட் சர்ப்ரைஸ்’ கொடுக்கப்படுகிறது. அதாவது, பிக் பாஸ், வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தருகிறார். அந்த தொகை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பிக் பாஸ் வீட்டிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பலருக்கும் பணத் தேவை உள்ளதால், போட்டியாளர்களில் சிலர் ஜாக்பாட் பரிசை எடுத்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது குறித்தான ப்ரொமோ இதோ:
#Day102 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/V8pxiEmhUG
— Vijay Television (@vijaytelevision) January 14, 2021






