டிவி
பணப் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டுக் கிளம்புகிறாரா ரம்யா பாண்டியன்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பிக்பாஸ் தமிழ் சீசந் 4 நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ளது. பைனல்ஸ் நெருங்கி வரும் சூழலில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அத்தனை போட்டியாளர்களும் வீட்டுக்குள் வந்து இறங்கி உள்ளனர். தற்போது பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் களைகட்டி வருகிறது. இதனுடனே பிக்பாஸ் பைனல்ஸ் நாள் அருகில் வருவதை அடுத்து இறுதிப் போட்டியாளர்களுள் வெளியேற வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஜாக்பாட் ஆக ஒரு தொகை வழங்கப்படும்.
இறுதிப் போட்டியாளர்களுள் வேண்டியவர்கள் தாங்கள் வெளியேற விரும்புபவர்கள் அந்த பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே வீட்டைவிட்டு வெளியேற பிக்பாஸ் அனுமதி அளிப்பார். அதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று பணப்பெட்டி உடன் நடிகை ரம்யா பாண்டியன் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
#Day102 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/V8pxiEmhUG
— Vijay Television (@vijaytelevision) January 14, 2021

















