சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் முதல் பாலிவுட் படம்..!- தமிழ் ரீமேக்கா?

நடிகர் விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் திரைப்படம் ஒரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகர் அமீர் கானின் லால் சத்தா திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அந்தப் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார்.

இதையடுத்து தற்போது புதிய ஹிந்தி படம் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். தமிழில் வெளியாக ஹிட் அடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தமிழ் படமான மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் மூலமாக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தின் ஹிந்தி பெயர் புத்தாண்டு தினத்தின் அன்று வெளியாக உள்ளது.
மாநகரம் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்குநர் சந்தோஷ் சிவன் பாலிவுட்டில் இயக்குகிறார்.





















