சினிமா செய்திகள்
கட்டாய வெற்றிக்காக மீண்டும் ஜீவா உடன் இணையும் ராஜேஷ்..!

எஸ்.எம்.எஸ் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் ராஜேஷ் தற்போது மீண்டும் தனது முதல் பட நாயகன் ஜீவா உடன் இணைய உள்ளார்.
நகைச்சுவை நிறைந்த காதல் மசாலா படங்களைத் தருபவர் இயக்குநர் ராஜேஷ். தொடக்க காலத்தில் இவரின் அத்தனைப் படங்களும் மிகுந்த வரவேற்பையும் வசூல் சாதனையையும் செய்து வந்தன. எஸ்.எம்.எஸ் திரைப்படம் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைக் கைப்பற்றின.
ஆனால், வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவுங்க, லோக்கல் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. தொடர்ந்து தோல்விப் படங்களாக வழங்கி வருவதால் கட்டாய வெற்றியை நோக்கிக் காத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
இதனால், மீண்டும் தனது முதல் பட நாயகன் ஜீவா உடன் இணைந்தே ஒரு கம்பேக் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் இயக்குநர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வருகிற 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















