சினிமா செய்திகள்
வரி ஏய்ப்பு செய்தாரா ஏ.ஆர்.ரகுமான்? சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை தொடங்கிய வழக்கில், ஏ.ஆர்.ரகுமான விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ரிங்டோன் இசை அமைத்து தந்த ஏ.ஆர்.ரகுமான், அதற்காக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெற்றார்.
இந்த தொகையை நேரடியாக ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான அறக்கட்டளைக்குச் செலுத்துமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால், வருமான வரி ஏய்ப்பு செய்யவே ஏ.ஆர்.ரகுமான் இப்படி செய்ததாக வருமான வரி துறை நடவடிக்கை எடுத்தது.
அப்போது ஏ.ஆர்.ரகுமானின் விளக்கத்தைப் பெற்ற முதன்மை ஆணையர், விசாரணையைக் கைவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால் அதை ஏற்காத வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரகுமான் மீது வருமான வரி ஏய்ப்பு வழக்கைத் தொடங்கியது.
அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள், ஏ.ஆர்.ரகுமானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


















