சினிமா செய்திகள்
பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. திரை உலகினர் அதிர்ச்சி!

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரை உலகினர் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் திரைக்கு வந்த வடிவேல் பாலாஜி முனி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
42 வயதான வடிவேல் பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சிகிச்சை பலன் இல்லாமல் போக அவரது இரண்டு கைகளும் செயல் இழக்கத் தொடங்கின.
பின்னர் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால், தனியார் மருத்துவமனையிலிருந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார், இவரது இறப்புக்குத் திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












