இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

- தமிழ்நாடு முழுவதும் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு 3 மாதங்களாக கூலி வழங்கவில்லை என புகார். மாதத்திற்கு 10 நாள்கூட வேலை வழங்குவதில்லை என குமுறல்.
- 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் வாதத்தை நிராகரிக்க Ntண்டும் என தேர்தல் ஆணையம் உயர் நீதி மன்றத்தில் வாதம்.
- தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இன்று 5வது நாளாக போராட்டம்!
- டெல்லி, மும்பையில் சிஜெபி கட்சியினர் போராட்டம்; சென்னையிலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
- கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்வு. கிராமுக்கு ரூ.10000 வரை வழங்கப்படும்.
- அண்ணன் சீர் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் ஒரு பட்டுப்புடவை வழங்க அரசாணை வெளியீடு.ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு
- 1000 க்கு மேற்பட்ட இடைநிலை சுகாதார பணியாளர் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்த செவிலியர்கள் பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் காத்திருப்பு போராட்டமாக மாற்ற முடிவு செய்ததால் காவல் துறையினர் செவிலியர்களை கைது செய்ய முயற்சி. தள்ளுமுள்ளு ஏற்பட்டது
- ரஷ்யா உருவாக்கிய 9M730 Burevestnik என்பது அணு உலையைப் பயன்படுத்தி இயக்கப்படும் தனித்துவமான குரூஸ் ஏவுகணையாகும். இதன் சிறப்பம்சம், வழக்கமான எரிபொருள் வரம்புகளைத் தாண்டி மிக நீண்ட தூரம் பறக்கும் திறன் இருப்பதாகக் கூறப்படுவதுதான். 2025-ல் நடந்த சோதனையில், சுமார் 14,000 கி.மீ. தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்ததாக ரஷ்யா தெரிவித்தது. குறைந்த உயரத்தில் பறந்து பாதையை மாற்றும் திறன் இருப்பதால், எதிர்கால ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இது சவாலாக இருக்கக்கூடும்.
- சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நல்லெண்ணெய் விலை கிடுகிடு உயர்வு: லிட்டர் ரூ.365க்கு விற்றது ரூ.410 வரை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
- “புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எந்த அனுமதியும் உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த ஒப்புதல் இன்றி ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த முடிவுகளை ரத்து செய்ய நீதிமன்றம் தயங்காது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமித்த முடிவா என்பது குறித்து தேர்தல் ஆணையமும், ஒன்றிய சட்டத்துறையும் பதிலளிக்க வேண்டும்.”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி!
- வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றம்? பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க நிலம் வகைப்படுத்தப்பட்டதாக தகவல்!
- சிறையில் உள்ள இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி இஸ்லாமாபாத்தில் பேரணி.. நாளை மறுநாள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை…



