ஆரோக்கியம்
வீட்டிலேயே எளிதாக தேங்காய் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி? கோடைக்காலத்திற்கு சூப்பர் ரெசிபி!

வீட்டிலேயே சுவையான தேங்காய் ஐஸ்க்ரீம் – எளிய செய்முறை
கோடைக்காலம் தொடங்கியவுடன் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக ஜூஸ், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவை அதிகமாக விரும்பப்படுகின்றன. தற்போது பலர் வீட்டிலேயே புதிய உணவுகளை முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தேங்காய் ஐஸ்க்ரீம் (Coconut Ice Cream) ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். இயற்கையான தேங்காய் சுவையுடன் இருக்கும் இந்த ஐஸ்க்ரீம் மிகவும் ருசியாக இருக்கும்.
தேங்காய் ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் துண்டுகள் – 3/4 கப் (மென்மையான வெள்ளைப் பகுதி)
தேங்காய் தண்ணீர் – 1/4 கப்
தேங்காய் பால் – 1/2 கப்
விப்ட் க்ரீம் – 1 கப்
பால் – 1/3 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
இளநீர் வழுக்கை துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
1. முதலில் ஒரு மிக்ஸி ஜாடியில் தேங்காய் துண்டுகள் மற்றும் தேங்காய் தண்ணீரை சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக அரைக்கவும்.
2. அதன் பிறகு அதில் தேங்காய் பால் மற்றும் பால் சேர்த்து மீண்டும் லேசாக அரைத்து நன்றாக கலக்கவும்.
3. மற்றொரு பெரிய பாத்திரத்தில் குளிர்ந்த விப்ட் க்ரீமை எடுத்துக் கொண்டு அதன் அளவு இரட்டிப்பாகும் வரை நன்றாக பீட் செய்யவும்.
4. தயாரித்த தேங்காய் கலவையை அந்த விப்ட் க்ரீமில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் வெண்ணிலா எசன்ஸையும் சேர்க்கவும்.
5. இறுதியாக நறுக்கிய இளநீர் வழுக்கை துண்டுகளை சேர்த்து மெதுவாக மிக்ஸ் செய்யவும். இது ஐஸ்க்ரீமின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
6. இப்போது இந்த கலவையை காற்று புகாத கொள்கலனில் ஊற்றி அதன் மேல் பட்டர் ஷீட் அல்லது மூடி வைத்து ஃப்ரீசரில் வைக்கவும்.
7. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்தால், மறுநாள் சுவையான தேங்காய் ஐஸ்க்ரீம் தயார் ஆகிவிடும்.


