சினிமா செய்திகள்
கோமாளி படத்தின் 7வது போஸ்டர் ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் 7வது போஸ்டர் லுக் இன்று ரிலீசாகியுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் 7வது லுக் இன்று வெளியானது. இதில், ஆதாம் – ஏவாள் லுக்கில் ஆடை அணியாமல், செடி மறைவில் ஆப்பிள் வைத்துக் கொண்டு ஜெயம் ரவியும், காஜல் அகர்வாலும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.
9 கெட்டப்புகளில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலக் கட்டத்தில் படத்தின் போஸ்டர்கள் ரிலீசாகி வருவதால், டைம் மெஷின் கான்செப்ட் திரைப்படமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்னும் 2 போஸ்டர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வெளியாகும் என்றும், விரைவில் படம் ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

















