இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.12.2025

- இன்று மாலை தங்கமும் வெள்ளியும் மீண்டும் விலை உயர்ந்து விற்பனை ஆகின. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.13100க்கும் சவரன் ரூ.104800க்கும் விற்பனை ஆகியது. வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து கிராம் ரூ.285க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.285000க்கும் விற்பனை ஆகியது.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்க ஜனவரி 5 முதல் நாடு தழுவிய அளவில் மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும். – மல்லிகார்ஜீன கார்கே.
- யுக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் – எல்லையில் போர் விமானங்களுடன் போலந்து.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுதும் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. ரூ.80 லட்சம் நிதி ஓதக்கீடு செய்யப்பட்டது.
- பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
- பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் வழங்கப்படும். – அமைச்சர் காந்தி.
- பள்ளி மாணவர்கள் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி உத்தரப்பிரதேச அரசு உத்தரவு.
- ஒடிசாவில் பள்ளி மாணவர்கள் பாதியில் படிப்பதை நிறுத்துவதை தடுக்க இலவச பேருந்து பயண திட்டம் அறிவிப்பு
- 2025ல் இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு அமெரிக்கா அல்ல. சவுதிஅரேபியாதான். 11000 க்கும் அதிகமானவர்களை வெளியேற்றி உள்ளது.


















